ஜவ்வாது மலையில்தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு தலைவர் மதிவாணன் ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன்.
ஜவ்வாதுமலையில் அதிகாரி திடீர் ஆய்வு
- ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்தது வருகிறது
- 2 இடங்களில் புதிதாக விடுதி கட்ட மனு
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் கட்டப்படும் பள்ளி கட்டிடத்தினை அதன் தலைவர் மதிவாணன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் செயல்பாடு எப்படி மாணவர்களின் கல்வித் திறன் எப்படி உள்ளது மேலும் கட்டிடத்தின் வசதிகள் குறித்து புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடங்கள் பார்வையிடுவதற்காக இங்கு வந்துள்ளேன்.
தற்போது பட்டறை காடு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும் ஆட்டியானூர் பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 46 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பு வரை கொண்ட கட்டிடமும் அரசு பழங்குடியினர் நல ஒன்று உறைவிட உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் மூன்று வகுப்பறை கட்டிடம் ரூ. 51.60 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்களின் வாழ்க்கை திறன் உயர்வதற்காக தாட்கோ மூலம் கடனுதவி பெறுவதற்காக வரும் செவ்வாய்க்கிழமை ஜமுனாமரத்தூர் யூனியன் அலுவலகத்தில் சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்துப் பகுதி மக்களையும் அழைத்து விழிப்புணர்வு கூட்டம் போடப்பட்டு அதன் மூலம் யார் யாருக்கு என்னென்ன தொழில் செய்ய வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் வங்கிகள் மூலம் 50 சதவீத மானியத்தில் கடன் உதவி அளிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.
மேலும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மற்றும் மாவட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலுவிடமும் 2 இடங்களில் ஹாஸ்டல் புதிதாக கட்டுவதற்கும் மேலும் கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பதற்கும் மனு கொடுத்து உடனடியாக பணிகளை செய்து முடிக்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.
ஆய்வின் போது எம்எல்ஏ சரவணன், வேலூர் மாவட்ட தாட்கோ செயற்பொறியாளர் சுதா, உதவி செயற்பொறியாளர்கள் இமாம்காசிம், கண்ணன், திருவண்ணாமலை மாவட்ட தாட்கோ மேலாளர் ஏழுமலை, யூனியன் சேர்மன் ஜீவா, துணைச் சேர்மன் மகேஸ்வரி, பிடிஓ பிரகாஷ் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.