உள்ளூர் செய்திகள்

லட்சுமி நாராயண பெருமாள் மூலவர் கோபுரம் மீது செடிகள். லாலயம் செய்ய தோண்டிய பள்ளம் புற்கள் வளர்ந்து உள்ளது.

லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி சீரமைக்க வேண்டும்

Published On 2022-07-25 14:22 IST   |   Update On 2022-07-25 14:22:00 IST
  • பக்தர்கள் வலியுறுத்தல்
  • கருவறை கோபுரத்தின்மேலே செடிகள் வளர்ந்து வருகிறது

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பகுதியில் லட்சுமி நாராயணபெருமாள் கோவில் உள்ளது. ஊரின் நடுவே உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தக்கோயில் கடந்த 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளதால் கோவில் கருவறை கோபுரத்தின்மேலே ஆலமரச்செடிகள் வளர்ந்து வருகிறது. இதையாரும் கண்டுகொள்ளவில்லை.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலில் உள்ளூர் பிரமுகர்கள் சிலர் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி மேற்கொண்டனர்.

அப்போது பாலாலயம் பூஜைக்காக தோண்டப்பட்ட பள்ளம் தற்போது மூடப்படாமல் புற்கள் முளைத்த நிலையில் உள்ளது. பழமையான இக்கோவிலில் மூலவராக நரசிம்மர் தனது வலது தொடையில் லட்சுமிஅம்மனை அமரவைத்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தும் யாரும் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யாமல் உள்ளது மிகவும் வேதனையானது பக்தர்கள் சிலர் தெரிவித்தனர். எனவே இக்கோவிலை உடனடியாக புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகள் உள்ளூர் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிலினுள் ஆஞ்சநேயர், ஐயப்பன், துர்காதேவி, நவக்கிரக சன்னதிகள் தனித்தனியே உள்ளது.

ராகு காலமான வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பெண்கள் சிலர் விளக்கு பூஜை செய்து வருகின்றனர். ஊரின் நடுவே இக்கோயில் உள்ளதால் உரிய முறையில் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News