உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப் பொருட்கள்
- ரூ.15 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது
- பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு விளையாட்டு பாட வேளையில், விளையாட தேவையான ரூ.15 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு பொருட்கள் பிடிஏ மற்றும் எஸ்எம்சி சார்பில் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தலைமை ஆசிரியர் பாபு, பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.