தலைமை ஆசிரியர் வீட்டில் திருட்டு
- ரூ.2 லட்சம், நகைகளை கொள்ளை கும்பல் அள்ளி சென்றனர்
- போலீசார் விசாரணை
வேட்டவலம்:
வேட்டவலம் அருகே ஓலைப்பாடி ஊராட்சி மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி தேவி வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
இந்த நிலையில் முருகன், தேவி மற்றும் மகன் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் அதி காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் 2 பவுன் நகைகளை மர்ம கும்பல் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து முருகன் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.