- 80 மனுக்கள் பெறப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் உதவி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு முகாம் உதவி கலெக்டர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் தனியார் பஸ் வசதி வேண்டி, இலவச வீட்டு மனை பட்டா, ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளி உதவி தொகை, சொட்டு நீர்ப்பாசனம் அனுமதி, ஆரணி பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மற்றும் முறைகேடு புகார் உள்ளிட்ட 80 புகார் மனுக்கள் பெறப்பட்டன.
இந்த முகாமில் ஆரணி ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு பாலில் தண்ணீர் கலந்து முறைகேட்டில் ஈடுபட்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி கொடுக்கும் நடவடிக்கையில் தற்போதைய அ.தி.மு.க. தலைவர் ஈடுபடுவதாகவும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக இயக்குநர்கள் யேசுராஜன், குப்பன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.