- வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், திருவத்திபுரம், ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் சேரன் (வயது 56). அரசு ஊழியர்.
நேற்று வேலை முடித்துவிட்டு மாலை 6 மணி அளவில் காஞ்சிபுரம் செய்யாறு சாலை வழியாக கன்னியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சேரன் வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற ரோடு ரோலர் வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் கீழே விழுந்து தலை மற்றும் கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேரனை அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஆற்காடு ரத்தனகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே சேரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சேரன் அக்கா மகன் செந்தில்குமார் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.