திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகளிர் போலீசார் பொன்விழா கொண்டாடிய போது எடுத்த படம்.
திருவண்ணாமலையில் மகளிர் போலீசார் பொன்விழா
- கேக் வெட்டி கொண்டாடினர்
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகளிர் போலீசார் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்துகொண்டு மகளிர் போலீசாரை வாழ்த்தி பேசினார். விழாவில் ஆயுதப்படையில் பணியாற்றும் ரேஷ்மா என்பவர் கேக் வெட்டி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ்களை டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார். இதில் திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பணிபுரியும் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.