உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் எரிந்து வரும் குப்பை கிடங்கை தீயணைப்புத் துறையினர் அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி.

திருவண்ணாமலையில் 3-வது நாளாக தீப்பிடித்து எாியும் குப்பை கிடங்கு

Published On 2023-03-13 14:20 IST   |   Update On 2023-03-13 14:20:00 IST
  • சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் சிரமம் அடைந்தனர்
  • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் குப்பை கிடங்கு உள்ளது.

நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகள் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டு இங்கு கொட்டப்படுகிறது. நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர்.

காற்றின் வேகத்தால் தீ குப்பை கிடங்கில் பெரும்பாலான இடத்தில் பரவி எரிந்தது. இதனால் அங்கிருந்து வெளியேறிய கரும் புகையினால் திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலை, போளூர் சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் குப்பை கிடங்கில் தீ எரிந்தது. குப்பை கிடங்கு அருகில் கிரிவலப்பாதையில் உள்ள 8-வது லிங்கமான ஈசானிய லிங்கம் கோவில் உள்ளதால் கோவிலுக்கு கிரிவலம் வந்த பொதுமக்களும் புகையினால் அவதி அடைந்தனர்.

குப்பை கிடங்கில் தீ அணைக்கும் பணியை திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் எரிந்தது. ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் முருகேசன், துப்புரவு ஆய்வாளர் மால் முருகன், தூய்மை அருணை மேற்பார்வையாளர் கார்த்திவேல்மாறன், நகரமன்ற துணைத்தலைவர் ராஜாங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News