உள்ளூர் செய்திகள்
முகாம் நடந்த காட்சி.
நிதி சார் விழிப்புணர்வு கல்வி முகாம்
- பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் நடந்தது
- கடன்கள் குறித்து விளக்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஒண்ணுபுரம் கிளை சார்பில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு ஒண்ணுபுரம் கிளை மேலாளர் பாரதி தலைமை தாங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மகளிர் குழு கடன், நகை கடன், சிறுவணிக கடனுதவி உள்பட பல்வேறு சேவைகள் குறித்து விளக்கினார். முகாமை வங்கி உதவியாளர் நாராயணன் வரவேற்றார்.
இதில் வங்கி வாடிக்கையாளர்கள் எல். சேகர், ஏழுமலை, மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
முடிவில் மேல்நகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.