உள்ளூர் செய்திகள்

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-20 14:44 IST   |   Update On 2022-07-20 14:44:00 IST
  • பணம் தராமல் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
  • ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

செய்யாறு:

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சங்க மாவட்ட தலைவர் ஹரிதாஸ் தலைமையில் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் 2021-2022 பருவ ஆண்டில் சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கு கடந்த 5 மாதங்களாக பணம் தராமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

ஆலையின் இருப்பில் உள்ள சர்க்கரையை விற்க அனுமதி வழங்கவில்லை, ஆலையிலிருந்து பெற்ற 22 கோடி மதிப்பிலான இணை மின்சாரத்திற்கு உரிய பணம் வழங்கவில்லை எனவும், கடன் பெற அனுமதிக்காமல் காலம் தாழ்த்துகின்றனர் எனவும், கரும்புக்கு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் வெட்டுக் கூலியை ஆலய நிர்வாகமே வழங்க வேண்டும், நுழைவு வாயிலில் எடை மேடை அமைக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News