உள்ளூர் செய்திகள்
பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
- பஸ் ஏறும் போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள மாளிகைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன் (வயது 53). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
இன்று காலை சென்னைக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏறும் போது டிரைவர் பஸ்சை எடுத்துள்ளார். இதில் கீழே தவறி விழுந்து அதே பஸ் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இது சம்பந்தமாக அவரது மனைவி காமாட்சி செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.