கலசப்பாக்கம் அடுத்த பெரிய கிளாம்பாடி ஏரியில் வழிந்து ஓடும் தண்ணீரில் சரவணன் எம்.எல்.ஏ. மலர் தூவி வரவேற்றார்.
கனமழையால் அணை, ஏரிகள் நிரம்பி வழிகிறது
- உபரி நீர் வெளியேற்றம்
- சரவணன் எம்.எல்.ஏ. மலர் தூவி வரவேற்றார்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேலும் ஜவ்வாது மலையில் பெய்த கனமழையின் காரணமாக மிருகண்டா அணை, செண்பகத்தோப்பு அணை, குப்பநத்தம் அணை என 3 அனைகளும் நிரம்பி வருகிறது.
மேலும் செய்யாற்றில் வெள்ளம் வருவதால் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர், சி நம்மியந்தல், மஷார், பெரியகிளாம்பாடி ஆகிய ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறுகின்றன.
துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகிளாம்பாடி ஏரி நிரம்பி வழிந்து ஓடும் தண்ணீரில் சரவணன் எம்.எல்.ஏ. மலர் தூவி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சிவராமன் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி, துணைத்தலைவர் ராமன் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.