உள்ளூர் செய்திகள்
பக்தர்களுக்கு தினமும் மூலிகை கஞ்சி
- போளூர் நற்குன்று கோவில் அருகே வழங்கப்படுகிறது
- நூற்றுக்கணக்கானோர் பயனடைகின்றனர்
போளூர்:
போளூர் நற்குன்று கோவில் அருகே ஸ்ரீ கிருஷ்ணா டிரேடர்ஸ் நிறுவனம் மற்றும் சத்குரு கோபாலனந்தர் கோவில் அமைந்துள்ளது.
முருகாபாடி கிராமம் அ.கோ.படவேடு பசியாற்றுவித்தல் மையம் சார்பில் கடந்த மார்கழி 1-ந் தேதி முதல் தினசரி காலை சித்திரத்தை வள்ளாரை, கரிசலாங்கண்ணி, தூதுவளை, கற்பூரவள்ளி முடக்கத்தான், துளசி, மிளகு, சீரக, ஓமம் கருஞ்சீரகம் போன்றவை மூலம் செய்த மூலிகை கஞ்சி செய்யப்படுகிறது.
இந்த மூலிகை கஞ்சி தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டு வருகிறது பசியாற்றுவித்தல் நிர்வாகி பாலகிருஷ்ணா இதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார்.