உள்ளூர் செய்திகள்

செய்யார் அடுத்த அளத்துரை கிராமத்தில் சேதம் அடைந்த தரைபாலத்தை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்த போது எடுத்த படம். 

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட வெம்பாக்கம், செய்யாறு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-12-11 14:26 IST   |   Update On 2022-12-11 14:26:00 IST
  • 174 மின்கம்பங்கள் சேதம்
  • உடைந்த தரை பாலத்தை உடனடியாக கட்ட நடவடிக்கை

செய்யாறு:

மாண்டஸ் புயலால்செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கலெக்டர் பா. முருகேஷ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் செய்யாறு அரசினர் மகளிர் பள்ளி சுற்றுச்சுவர்இடிந்து விழுந்துள்ளதையும், வெம்பாக்கம் தாலுக்கா பிரம்மதேசம் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதையும், பின்னர் அனக்காவூர் ஒன்றியம், அளத்துரை கிராமத்தில் தரைப்பாலம் சேதம் அடைந்த வெள்ளத்தினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சேதமடைந்த பாலத்தை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அளத்துறையில் பாதிக்கப்பட்ட தரைப்பாலத்திற்கு சிறிய பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இதே கிராமத்தில் சிறிய கல்வெட்டும் விரைவாக கட்டித் தரப்படும். செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் 25 குடிசைகள் பகுதியாகவும், 10 குடிசைகள் முழுமையாகவும், சேதம் அடைந்துள்ளது. 53 மரங்கள் சாய்ந்துள்ளது. 11 கால்நடைகள் இறந்துள்ளன.

174 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது சேதம் அடைந்த மின்கம்பங்கள் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படும். பாதிக்கப்பட்டவர்களின் சேதத்தை கண்காணித்து அரசுக்கு உடனடியாக அறிக்கையை அனுப்பி வைத்து விரைவாக நிவாரணம் பெற்று தரப்படும். இவ்வாறு அவா கூறினார்.

Tags:    

Similar News