உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Published On 2022-06-11 13:58 IST   |   Update On 2022-06-11 13:58:00 IST
  • 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருடி சென்றுள்ளனர்.
  • கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்தனர்.

கலசபாக்கம்:

கலசபாக்கம் அருகே தேவனாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.

இவர் தனது மகன் திருமண விழாவிற்காக உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று காலை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து உள்ளே இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், ரொக்க பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இதேபோன்று அடுத்தடுத்த வீடான சுரேஷ், சந்தோஷ் ஆகியோரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த தங்க நகைகள், பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

3 வீடுகளில் சுமார் 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து முருகன், சந்தோஷ், சுரேஷ் ஆகியோர் தனித்த னியே கலசபாக்கம் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News