- குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அருகே கண்ணக்கந்தல் கிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் பூபாலன் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ரோஜா. இவர்களுக்கு நந்திதா (6) என்ற மகளும், ஹரிதாஸ் (4), சரத் (1½) ஆகிய மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று எதிர் வீட்டில் பூபாலன் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். பகல் 1 மணி அளவில் மனைவியை அழைத்து வீட்டு குடிநீர் தொட்டியில் தண்ணீர் உள்ளதா என பார்க்க சொன்னதாக தெரிகிறது.
இதையடுத்து ரோஜா குடிநீர் தொட்டியின் மேல் இருந்த இரும்பு மூடியை திறந்து பார்த்து தண்ணீா் இருக்கிறது என கூறிவிட்டு வீட்டு வேலைகளை பார்க்க சென்றார்.
சிறிது நேரம் கழித்து சிறுவன் ஹரிதா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். பின்னர் திறந்திருந்த குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூழ்கி கிடந்தது. தெரியவந்தது. உடனடியாக சிறுவனை தூக்கி கொண்டு தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டா்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பூபாலன் தண்டராம்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.