செய்யாறில் பால குஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி.
பால குஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு
- பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
செய்யாறு:
செய்யாறு அடுத்த, திருவத்தூரில் செய்யாற்ற ங்கரையில் அமைந்துள்ள பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இன்று அதிகாலை 2.30மணி அளவில் 6-ம் யாக காலை பூஜை நடைபெற்று, அதனை தொடர்ந்து காலை 6.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து அனைத்துகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு பிச்சாண்டி, எம் எல் ஏ ஒ ஜோதி, எ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர் மோகனவேலு, நகர செயலாளர் கே. விஸ்வநாதன், திருப்பணிகுழு தலைவர் உருத்திரப்பன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு டிஎஸ்பி செந்தில் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. 17 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.