உள்ளூர் செய்திகள்
பிடாரி அம்மன் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் கண்ணமங்கலம் பேரூராட்சியில் அளவீடு பணியை உதவி இயக்குனர் பார்வையிட்டார்.
கண்ணமங்கலம் பேரூராட்சியில் உதவி இயக்குனர் ஆய்வு
- பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்டார்
- சொத்து சீராய்வு குறித்து ஆலோசனை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சியில் நேற்று 15ம்தேதி வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய் வருகை தந்து பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்டார்.
மேலும் பிடாரி அம்மன் குளம் சீரமைப்பு, கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, சொத்து வரி சீராய்வு செய்ய அளவீடு பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், துணை தலைவர் குமார், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.