உள்ளூர் செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடி வசூல்

Published On 2023-05-24 09:31 GMT   |   Update On 2023-05-24 09:31 GMT
  • கடந்த 5-ந் தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடந்தது
  • 165 கிராம் தங்கம், 2 கிலோ 213 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தின மும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாம லைக்கு வந்து கிரிவலம் செல்வார்கள். இதில் சித்ரா பவுர்ணமி விசேஷமாகும். அன்றைய தினம் திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும். அதன்படி கடந்த 5-ந் தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடந்தது.

ஒவ்வொரு பவுர்ணமி முடிந்த பின்னரும் கோவில் உண்டி யல் காணிக்கை எண்ணப்படும். அதன்படி இந்தமாதம் பவுர் ணமிமுடிவடைந்ததையொட்டி நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் வளாகங்களில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள உபகோவில் உண்டியல்கள் என மொத்தம் 70 உண்டியல்கள் அருணாச லேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு இணை ஆணையர் குமரேசன் (பொறுப்பு) முன்னிலையில் காணிக்கை எண்ணப் பட்டது.

இதில் ரூ.2 கோடியே 16 லட்சத்து 4 ஆயிரத்து 221-ஐ பக்தர் கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 165 கிராம் தங்கம், 2 கிலோ 213 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Tags:    

Similar News