உள்ளூர் செய்திகள்
புதுப்பாளையத்தில் பகுதி சபை கூட்டம்
- வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சரவணன் எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் புதுப்பாளையம் பேரூராட்சியில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் பகுதி சபை கூட்டம் 10-வது வார்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் உஸ்னாபி அனைவரையும் வரவேற்று பேசினார்.
பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. கிராம மக்களிடம் கோரிக்கை களையும், நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
வட்டாட்சியர் முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் பவ்யாஆறுமுகம், சீனுவாசன், மாவட்ட கவுன்சிலர் அல்லிந்தல் மனோகரன், ஜெயபிரகாஷ், கா.சு.இளங்கோவன், சுதாகர், தலைமை எழுத்தர் ரமேஷ் உள்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.