உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பம்

Published On 2023-01-18 14:45 IST   |   Update On 2023-01-18 14:45:00 IST
  • கலெக்டர் முருகேஷ் தகவல்
  • பிப்ரவரி 28-ந் தேதி கடைசி நாள்

திருவண்ணாமலை:

வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சி, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி, பட்டப்படிப்பு கல்வித்தகுதிகள் தேர்ச்சிப் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவர்கள் கடந்த 31.12.2022-ம் தேதியின் நிலவரப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்ப ப்படிவத்திலோ, அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ பூர்த்தி செய்ய வேண்டும்.

பின்னர் வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றுகள் அசல் மற்றும் நகல்களுடன் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Tags:    

Similar News