உள்ளூர் செய்திகள்

கார்த்திகை தீப விழாவின் 3-வது நாளையொட்டி நேற்று இரவு சிம்ம வாகனத்தில் அண்ணாமலையார் மாட வீதியில் உலா வந்த காட்சி.

நாக வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா

Published On 2022-11-30 15:06 IST   |   Update On 2022-11-30 15:06:00 IST
  • இரவு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது
  • திரளான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் இன்று 4-வது நாளான இன்று காலை நாக வாகனத்தில் அண்ணாமலையார் மாடவீதியில் உலா வந்தார்.

இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி கற்பகவிருட்சகம், வெள்ளி காமதேனு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளன.

நேற்று 3-ம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News