உள்ளூர் செய்திகள்
- 20 ஆண்டுக்கு முன்பு படித்தவர்கள்
- மரக்கன்றுகளை நட்டு வைத்து நினைவு பரிசுகளை வழங்கினர்
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் (1998-2003) வரை படித்த முன்னாள் மாணவிகள் 20 வருடம் கழித்து நேற்று சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் மாணவி தேவி தலைமை வகித்தார், பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன் ஆசிரியைகள் கீதா, கே.கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவிகள் உமா, ரம்யா ஆகியோர் வரவேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமை ஆசிரியர் முத்துசாமி கலந்துகொண்டு முன்னாள் மாணவிகளை கவுரவப்படுத்தி மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
அனைவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் மரக்கன்றுகளை நட்டு வைத்து நினைவு பரிசுகளை வழங்கினர். இதில் முன்னாள் மாணவி வனிதா நன்றி கூறினார்.