உள்ளூர் செய்திகள்

ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆய்வக கட்டிடம்

Published On 2022-09-30 09:47 GMT   |   Update On 2022-09-30 09:47 GMT
  • பூமி பூஜை நடந்தது
  • வந்தவாசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

வந்தவாசி:

வந்தவாசியை அடுத்த வழூரில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் இந்த புதிய ஆய்வக கட்டிடம் கட்டப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு திமுக மாவட்டச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தார். வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயமணி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன் வரவேற்றார்.

வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் பூமி பூஜை மற்றும் கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.

வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சு.வி.மூர்த்தி, வந்தவாசி நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால், திமுக ஒன்றியச் செயலார்கள் எஸ்.பிரபு, சி.ஆர்.பெருமாள், வழூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News