உள்ளூர் செய்திகள்

தவளகிரீஸ்வரர் மலையில் தீ பற்றி எரிந்த காட்சி.

தவளகிரீஸ்வரர் மலையில் தீ வைத்த மர்ம கும்பல்

Published On 2023-02-11 15:04 IST   |   Update On 2023-02-11 15:04:00 IST
  • மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசம்
  • மலைப்பகுதியை பாதுகாக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வந்தவாசி:

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1440 அடி உயரத்தில் ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை உள்ளது.

பக்தர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கம். மேலும் கார்த்திகை தீபத்தன்று வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் மலை மீது ஏறி ஸ்ரீ தவளகிரீஸ்வரரை தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் மர்ம கும்பல் சிலர் மலையில் தீ வைத்துள்ளனர். இதனால் மலையின் ஒரு பகுதி மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

மலையில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் தீயில் எரிந்து கருகியது. தவளகிரீஸ்வரர் மலை மீது மர்ம கும்பல் தீ வைப்பது தொடர் கதையாக நவருகிறது.

அரியவகை மூலிகை செடிகள் மரங்கள் அதிகமாக இருக்கும் இந்த மலையை வனத்துறை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் பாதுகாக்கா மல் தொடர்ந்து அலட்சியமாக இருந்ததால் மர்ம கும்பல் மலை மீது தீ வைத்துள்தாக கூறப்படுகிறது.

இனிவரும் காலங்களில் வனத்துறை அதிகாரிகள் மூலிகைச் செடிகள் நிறைந்த இந்த மலைப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News