உள்ளூர் செய்திகள்

சாலையோரம் ஆபத்தான பள்ளம்

Published On 2022-10-01 14:41 IST   |   Update On 2022-10-01 14:41:00 IST
  • வாகன ஓட்டிகள் விழுந்து காயம்
  • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள வடதண்டலம் கிராமம், ஆரணி சாலையில் சிறு பாலத்தில் சேதம் அடைந்து, தார் சாலையின் பக்கத்தில் குழிப்பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதில் விழுந்து காயம் அடைந்தனர். இந்நிலையில் வடதண்டலம் இளைஞர்கள் விபத்து ஏற்படாமல் இருக்க சாக்கு பையில் மணலைக் கொட்டி அடுக்கி வைத்துள்ளனர்.

அந்த வழியில் செல்லும் நெடுஞ்சாலை துறையில் பணி புரியும் அலுவலர்கள் கடந்த 3 மாதமாக அதை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அந்த வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர்.

மேலும் அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் வந்தால் சிறுபாலம் உடைந்து விடக் கூடிய அபாயத்தில் உள்ளது. இதனை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று வயாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News