தாயின் கள்ளக்காதலனை தாக்கிய சிறுவன்
- மது போதையில் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம்
- கடலூர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்
ஆரணி:
போளூர் அடுத்த மூலக்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கும், ஆரணியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. பெண்ணிற்கு 17 வயதில் மகன் உள்ளார்.
இந்த நிலையில் தொழிலாளி அடிக்கடி பெண் வீட்டிற்கு வந்துள்ளார். இது சிறுவனுக்கு பிடிக்கவில்லை. இதனால் தொழிலாளிடம் இனிமேல் எனது வீட்டிற்கு வரக்கூடாது என கண்டித்துள்ளார்.
கடந்த 1-ந் தேதி மீண்டும் தொழிலாளி மது போதையில் அப்பெண் வீட்டிற்கு வந்து சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பின்னர் சிறுவனுக்கும் தொழிலாளிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சிறுவன் மற்றும் அவரது தாயார் சேர்ந்து தொழிலா ளியை கம்பு மற்றும் கையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்தார்.
இதனைக் கண்டு அக்கம்பக்கத்தினர் தொழிலாளியை மீட்டு ஆரணி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .
இது குறித்து தொழிலாளி நேற்று ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து கடலூர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.