வங்கி ஊழியர் பைக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
- ஆரணியில் பட்டப்பகலில் துணிகரம்
- கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை
ஆரணி:
ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் ஒரு தனியார் வங்கி உள்ளது. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வாழபந்தல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயுது34) என்பவர் வங்கியில் வாடிக்கையாளர் மையம் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார்.
மேலும் சுரேஷ் ஆரணியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சத்து 8ஆயிரத்து 300 ரொக்கம் எடுத்துள்ளார்.அதனை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து வாழபந்தல் நோக்கிச் சென்றுள்ளார்.
அப்போது சத்தியமூர்த்தி சாலையில் ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்க கடையின் முன்பு தனது பைக்நிகை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்த பணத்தை காணவில்லை இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் இச்சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் கடை அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் சுரேசை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பைக்கிள் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
ஆரணியில் பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.