உள்ளூர் செய்திகள்

ஜமாபந்தி நிறைவு விழா

Published On 2023-05-26 09:36 GMT   |   Update On 2023-05-26 09:36 GMT
  • ரூ.46 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
  • 220 மனுக்களுக்கு உடனடி தீர்வு

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.

ஆரணி சப்-கலெக்டர் தனலட்சமி தலைமை தாங்கினார். தாசில்தார் மஞ்சுளா முன்னிலை வகித்தார். வேளாண்மை துறை இணை இயக்குநர் புஷ்பா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் ராமசந்திரன், தி.மு.க. நகர செயளர் ஏ.சி.மணி, ஓன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இதில் பெறப்பட்ட மொத்தம் 987 மனுக்களில், 220 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படடது.

மீதமுள்ள மனுக்கள் விசாரணையில் உள்ளன.

இதில் ரூ.45 லட்சத்து 92 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகளை ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன், ஆரணி நகர செயலாளர் ஏ.சி.மணி, ஆரணி கோட்டாச்சியர் தனலட்சுமி ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க. ஓன்றிய செயலாளர்கள் அன்பழகன், சுந்தர், அ.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமார், கண்ண மங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் பாலாஜி நன்றி கூறினார்.

Tags:    

Similar News