கோப்புபடம்
புத்தாண்டு கொண்டாட்டம் - திருப்பூரில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசார் முடிவு
- வாலிபர்கள் வாகனங்களில் பறந்து சாகசம் செய்வது, மின்னல் வேகத்தில் செல்வது என அத்துமீறல்களிலும் ஈடுபட்டு விபத்தில் சிக்குகின்றனர்.
- புத்தாண்டுக்கு முந்தையை நாள், அன்றிரவு, மறுநாள் ஆகிய தினங்களில் கூடுதலாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
திருப்பூர்:
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மது அருந்திவிட்டு இரவில் விதிமீறி வாகனங்களை ஓட்டுவதால் ஆண்டின் தொடக்க நாளிலேயே விபத்துகளும், உயிர்ப்பலிகளும் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.சில வாலிபர்கள் வாகனங்களில் பறந்து சாகசம் செய்வது, மின்னல் வேகத்தில் செல்வது என அத்துமீறல்களிலும் ஈடுபட்டு விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே 2023 தொடக்கத்தில் விபத்து, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாமல் ஆண்டை வரவேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருப்பூர் மாநகர போலீசார் தயாராகி உள்ளனர். அவ்வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் புத்தாண்டையொட்டி செய்யப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.
புத்தாண்டுக்கு முந்தையை நாள், அன்றிரவு, மறுநாள் ஆகிய தினங்களில் கூடுதலாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.ஏற்கனவே உள்ள சோதனைச்சாவடிகள் தவிர்த்து கூடுதலாக அமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.