உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர 20-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Published On 2022-07-08 07:02 GMT   |   Update On 2022-07-08 07:02 GMT
  • பிட்டர், வயர்மேன், எலக்ட்ரீசியன், கார்பெண்டர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படுகின்றது.
  • இதில் 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

உடுமலை :

அரசு தொழில் பயிற்சி நிலையங்களில்( ஐ.டி. ஐ) சேர வரும் 20 ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உடுமலை அரசு தொழில் பயிற்சிநிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.டி.ஐ., சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிட்டர், வயர்மேன், எலக்ட்ரீசியன், கார்பெண்டர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படுகின்றன இதில் 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இவர்களுக்கு அரசின் விலை இல்லா மடிக்கணினி, புத்தகம், சைக்கிள், சீருடை மற்றும் காலனி மாதம் ரூ. 750 பயிற்சி உதவித்தொகை ,கட்டணம் இல்லா பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.பயிற்சி முடித்தவர்களுக்கு தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படுகிறது. அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர www.skiltraning.tn.in என்ற இணையதளத்தில் இம்மாதம் 20 ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் தாராபுரம் உடுமலை அரசினர் தொலைபேசி நிலையங்களில் உள்ள சேவை மையங்களை அணுகலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News