உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
திருப்பூரில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு
- அடிபட்டவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- அந்த சம்பவம் தற்கொலையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.
திருப்பூர்:
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே ஆண் ஒருவர் ெரயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ெரயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லோகநாதனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ெரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்தாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயற்சித்த போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா என சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.