உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.

அன்னை தெரசா மகளிர் தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் தினவிழா

Published On 2023-03-09 08:41 GMT   |   Update On 2023-03-09 08:41 GMT
  • பெண்களுக்கு தையல் எந்திரங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகம், பேனா, பென்சில் இலவசமாக வழங்கி வருகிறது.

திருப்பூர் :

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் தெற்கு ரதவீதி அரசு உயர்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் செயல்படும் அன்னை தெரசா மகளிர் தொண்டு நிறுவனத்தின் மகளிர் தின விழா பெருமாநல்லூரில் உள்ள லட்சுமி மகாலில் நடைபெற்றது. மகளிருக்கு கோலப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

விழாவில் 50 பெண்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான தையல் எந்திரங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை தொண்டு நிறுவனத்தலைவர் மகாராணி வரவேற்றார். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு வக்கீல் எம்.நாகராஜன் பரிசுகள் வழங்கினார். அன்னை தெரசா தொண்டு நிறுவனத்துக்கு தாய் அறக்கட்டளை மற்றும் வின்டெக்ஸ் நிறுவன உரிமையாளர் நடராஜன் ரூ. 25 லட்சம் நன்கொடையாக வழங்கினார். விழாவில் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் சார்பில் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ரூ10. ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவில் வேடசந்தூர் சுப்புலட்சுமி, சுபாஷ்சுதாகரன், விவசாயிகள் நலன் மற்றும் முன்னேற்ற கூட்டுறவு சங்க தலைவர் தீபா ராம்குமார், தஞ்சாவூரை சேர்ந்த பேச்சாளர்கள் சாந்தா நாகராஜன், வின்டெக்ஸ் நடராஜன், ஆடிட்டர் எம்.நரசிம்மன், என்.லலிதா ஆகியோர் பெண்களின் பெருமை பற்றியும், பலதுறைகளில் பெண்கள் படைத்த சாதனைகள் பற்றியும் பேசினர். தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மகாராணி கூறுகையில் "அன்னை தெரசா மகளிர் தொண்டு நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. கடந்த 14 ஆண்டுகளாக ஏழை-எளியோருக்கு இலவச தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பல உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. மேலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகம், பேனா, பென்சில் ஆகிய பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது" என்றார். முடிவில் சரஸ்வதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News