உள்ளூர் செய்திகள்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.

உடுமலையில் அமைப்புசாரா நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி

Published On 2022-08-26 14:00 IST   |   Update On 2022-08-26 14:00:00 IST
  • ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை, காலணி மற்றும் முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டது.

உடுமலை :

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு தொழிலாளர் நல வாரியம் சார்பில் உடுமலை நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார்( சமூக பாதுகாப்பு திட்டம்), உடுமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் மதுமதி ஆகியோர் முன்னிலையில் உடுமலை தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உடுமலை நகர தி.மு.க. செயலாளர் சி.வேலுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை, காலணி மற்றும் முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டது. நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.கலைராஜன், கவுன்சிலர் ஆறுச்சாமி, முன்னாள் நகர இளைஞர் அணி அமைப்பாளர் யுஎன்பி. குமார், தி.மு.க.மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆர். டி. எஸ். தனபால் சந்திரன், எல்.பி. எப். ஜெயராஜ் ,கே. பாபு கரீம், நகர மாணவரணி துணை அமைப்பாளர் லோகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி உறுப்பினர்கள், நல வாரிய அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .உடுமலை பகுதியில் உள்ள 750 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News