குப்பை கிடங்கில் குப்பை கிடங்கில் நகர் மன்ற தலைவர் கனியரசி முத்துக்குமார் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
வெள்ளகோவில் நகரை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் - பொதுமக்களுக்கு நகர்மன்ற தலைவி வேண்டுகோள்
- நகராட்சிக்கு சொந்தமான உர கிடங்கில் செயலாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
- இதுவரை 300 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடு குறித்து நகர் மன்ற தலைவர் கனியரசி முத்துக்குமார் சொரியங்கிணத்துபாளையத்தில் உள்ள உரக்கிடங்கு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து நகர் மன்ற தலைவர் கனியரசிமுத்துகுமார் கூறியதாவது:-
நகராட்சி அனைத்து வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் தினசரி தூய்மை பணியாளர்களைக் கொண்டு மக்கும் குப்பை,மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.அதனை நகராட்சிக்கு சொந்தமான உர கிடங்கில் செயலாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மக்கும் கழிவுகளை அரைத்து உரம் தயார் செய்து அதனை விவசாய பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் மக்காத கழிவிலிருந்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூர் அல்ட்ரா டெக் சிமெண்ட் பேக்டரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுவரை 300 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் நகரை தூய்மையாக வைக்கும் வகையில், ஓட்டல், பேக்கரி, டீ கடை,இரவு நேர தள்ளுவண்டி கடைகளில் இரவு நேரத்தில் கழிவுகள் சேகரிக்கும் பணி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குப்பைகள் ஆங்காங்கே தெருவில் கிடப்பதை தடுப்பதுடன் சுற்றுப்புற சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது.இதற்கு வணிக நிறுவனத்தினரும், பொது மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி நகரை தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.