உள்ளூர் செய்திகள்

வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

காங்கயத்தில் வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி - நகராட்சி, யூனியன் தலைவர்கள் பங்கேற்பு

Published On 2022-08-23 04:33 GMT   |   Update On 2022-08-23 04:33 GMT
  • கலை சிறப்புகள் மிகுந்த சலங்கையாட்டமும், வள்ளி கும்மியாட்டமும் நடந்தது.
  • சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்ட நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கயம் :

காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சார்பில் என்.எஸ்.என். திருமண மகாலில் தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலை சிறப்புகள் மிகுந்த சலங்கையாட்டமும், வள்ளி கும்மியாட்டமும் நடந்தது.

அப்போது கலந்து கொண்ட காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்ற நிர்வாகிகளில் ஒருவரும், காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மனுமான மகேஸ்குமார் தனது மன்ற நிர்வாகிகளுடன் (ஆண்கள் மற்றும் பெண்களுடன்) சலங்கையாட்டம் ஆடினார். தொடர்ந்து கொடுவாய் வெற்றிவேலன் கலைக்குழுவின் தலைவர் குருவேலன் தங்கவேலன் தங்களது குழுவின் உறுப்பினர்களுடன் வள்ளி கும்மியாட்டம் ஆடினார்.

அப்போது கலந்து கெரண்ட காங்கயம் நகராட்சி சேர்மன் சூர்யபிரகாஷ், காங்கயம் தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் என்.எஸ்.என்.தனபால் , செயலாளர் கங்கா சக்திவேல், பொருளாளர் பாலாஜி ரவிச்சந்திரன், காங்கயம் நகர , ஒன்றிய, வட்டார பகுதிகளின் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள் , சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்ட நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.   

Tags:    

Similar News