கோப்புபடம்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் - மன்ற தலைவர் என்.எஸ்.கே.சிவக்குமார் அறிக்கை
- திருப்பூர் மாவட்டம் முழுவதும் 8 சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு விழாக்கள் நடைபெற இருக்கிறது.
- நற்பணி மன்றத்தில் இணைக்கும் இணைப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் என்.எஸ்.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் இன்று முதல் 10 நாட்கள் தொடர்ந்து விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் டிசம்பர் 2-ந் தேதி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாநில தலைவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளைெயாட்டி தொடர்ந்து 10 நாட்கள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 8 சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு விழாக்கள் நடைபெற இருக்கிறது.
குறிப்பாக ஆதரவற்றோர் விடுதிகளுக்கு அன்னதானம், பல துறை மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், ரத்ததான முகாம், நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்குதல், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, புதிதாக உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற பெயர் பலகை திறப்பு விழா, மாற்று கட்சியில் இருந்து நண்பர்களை நற்பணி மன்றத்தில் இணைக்கும் இணைப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழா தொடக்கமாக உடுமலைப்பேட்டை நகராட்சி தேஜஸ் மகாலில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
10 நாட்கள் விழாவில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள், கழகத்தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும். இ்வ்வாறு அவர் கூறியுள்ளார்.