உள்ளூர் செய்திகள்

ஒரே மாதிரி மதிப்பெண் இரட்டையர்களை படத்தில் காணலாம்

பிளஸ்-2 தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த திருப்பூர் இரட்டையர்

Published On 2022-06-23 11:24 IST   |   Update On 2022-06-23 11:24:00 IST
  • இரட்டையர்களான ரோகித், ரோசன் இருவரும் 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர்.
  • திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்டம் முழுவதும் 218 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 269 மாணவர்களும், 13 ஆயிரத்து 126 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 395 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 726 மாணவர்களும், 12 ஆயிரத்து 833 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 95.18 சதவீதமும், மாணவிகள் 97.77 சதவீதமும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதில் திருப்பூரை சேர்ந்த இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர். திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்-அக்நெல் தம்பதியினர். இவர்களுக்கு ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டையர் ஆவர்.இரு மகன்களும் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த பிளஸ் -2 பொதுத் தேர்வில் இரட்டையர்களான ரோகித், ரோசன் இருவரும் 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர். நாங்கள் பிறப்பில் மட்டும் இரட்டைப் பிறவி அல்ல. மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரி மதிப்பெண்தான் எடுப்போம் என்று பிளஸ்-2 பொதுத்தேர்வில் இரட்டைப்பிறவியான இருவரும் சொல்லிவைத்தாற் போல் 417 மதிப்பெண் எடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News