உள்ளூர் செய்திகள்

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மரக்கன்றுகளை நட்டு வைத்த காட்சி.

பல்லடத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2022-11-28 04:11 GMT   |   Update On 2022-11-28 04:11 GMT
  • தமிழகத்தில் வனப்பரப்பு 22.98 சதம் உள்ளது.
  • 3.50 கோடி இலக்கை தாண்டி மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது.

பல்லடம் : 

பல்லடம் அருகே கள்ளகிணறு பகுதியில் தனியார் நிறுவனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் வனப்பரப்பு 22.98 சதம் உள்ளது. அதனை அதிகப்படுத்தும் வகையில் பசுமை தமிழகம் திட்டத்தை முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வரும் 2032 ம் ஆண்டுக்குள் வனப்பரப்பை 33 சதமாக உயர்த்தும் வகையில், இந்த ஆண்டு 2.50 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது 3.50 கோடி இலக்கை தாண்டி மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 15 கோடி மரக்கன்று நடப்படும் .அதற்கு அடுத்த ஆண்டு 25 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,சோமசுந்தரம்(பல்லடம்), அசோகன் (பொங்கலூர்), பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News