உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை

Published On 2022-08-07 11:42 GMT   |   Update On 2022-08-07 11:42 GMT
  • ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிதிக்கொள்கையை வெளியிட்டார்.
  • வட்டி 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

திருப்பூர் :

ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிதிக்கொள்கையை வெளியிட்டார்.இதில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 50 அடிப்படை புள்ளி உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து ரெப்போ வட்டி 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:- ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் வங்கி கடனுக்கான வட்டி விகிதமும் உயரும். தொடரும் வட்டி விகித உயர்வு மிகவும் கவலை அளிக்கிறது.திருப்பூர் நிறுவனங்கள் வங்கி கடன் பெற்றே பின்னலாடை ரகங்களை தயாரிக்கின்றன. வட்டி விகிதம் உயர்வு, நிறுவனங்களுக்கு சுமையை மேலும் அதிகரிக்கும்.ஏற்றுமதி நிறுவனங்கள், டாலர் உள்ளிட்ட அன்னிய செலாவணி பணத்தில் கடன் பெற்று ஆடை தயாரித்தால் வட்டி விகித உயர்வு பாதிக்காமல் தவிர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News