உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களையும், போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையும் படத்தில் காணலாம். 

திருமுருகன்பூண்டி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

Published On 2022-09-10 11:39 GMT   |   Update On 2022-09-10 11:39 GMT
  • 5-ந்தேதிக்குள் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி நகராட்சி ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அனுப்பர்பாளையம் :

திருமுருகன்பூண்டி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன் பூண்டி நகர்மன்ற துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி துப்புரவு பணியாளர்களை ஒன்று திரட்டி இன்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி நடராஜ், புறநகர் மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் நகராட்சி ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எதிர்வரும் மாதங்களில் 5-ந்தேதிக்குள் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News