உள்ளூர் செய்திகள்

செல்வராஜ் எம்.எல்.ஏ. மின்னணு தராசு வழங்கிய காட்சி.

தென்னம்பாளையம் உழவர்சந்தை விவசாயிகளுக்கு மின்னணு தராசு - செல்வராஜ் எம்.எல்.ஏ., வழங்கினார்

Published On 2022-08-20 16:14 IST   |   Update On 2022-08-20 16:14:00 IST
  • தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.
  • விவசாயிகள் கோரிக்கை வைத்த24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் , வியாபாரிகள் எடைக்கல் தராசு பயன்படுத்தி வருவதால் மின்னணு தராசு வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையினை ஏற்று தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் இன்று காலை உழவர் சந்தைக்கு நேரடியாக சென்று மின்னணு தராசுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். விவசாயிகள் கோரிக்கை வைத்த24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக விவசாயிகள், வியாபாரிகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News