உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் மணல், ஜல்லி விலை அதிரடியாக உயர்வு

Published On 2023-07-12 07:16 GMT   |   Update On 2023-07-12 07:16 GMT
  • வெட் மிக்ஸ் 2300 இல் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விற்கப்பட உள்ளது.
  • டிப்பர் லாரி உரிமையாளர்கள் கற்கள் விளையினை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் பெருமாநல்லூரில் ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்திற்கு பின் தலைவர் சந்திரன் கூறியதாவது:-

கட்டுமான பொருட்களான கருங்கற்கள், ஜல்லி, சிப்ஸ் ஆகியவற்றின் விலையினை குவாரி உரிமையாளர்கள் உயர்த்தி உள்ளார்கள். எனவே வேறு வழியின்றி டிப்பர் லாரி உரிமையாளர்கள் கற்கள் விளையினை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறோம். அதன்படி, எம் சாண்ட் ஒரு யூனிட் 3400 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தி விற்பனை செய்யப்படும்.

தரமான பி சாண்ட் 3500 இல் இருந்து நான்காயிரம் ரூபாயாகவும், முக்கால் இன்ச் ஜல்லி 2300 இல் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படும். ஒன்றரை இன்ச் ஜல்லி 2300 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விற்கப்படும். சிப்ஸ் ஜல்லி 1300 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விற்கப்படும்.

வெட் மிக்ஸ் 2300 இல் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விற்கப்பட உள்ளது. பவுடர் 2000 ரூபாயில் இருந்து 2750 ரூபாயாக உயர்த்தி விற்கப்படும். குவாரி உரிமையாளர்கள் விலை உயத்திய கட்டாயத்தால் இந்த விலை உயர்த்த வேண்டிய நிலைக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆளாகி இருக்கிறோம் என்றார்.

Tags:    

Similar News