உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஊதியூர் மலைப்பகுதியில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி

Published On 2023-03-25 06:09 GMT   |   Update On 2023-03-25 06:09 GMT
  • கன்றுக்குட்டி, ஆடு என 3 கால்நடைகளை சிறுத்தை தாக்கி கொன்றது
  • கூண்டு வைத்தும், 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

காங்கயம் :

திருப்பூர் மாவட்டம் காங்கயம் - ஊதியூர் பகுதியில் கடந்த 3ந் தேதி துவங்கி 7ந் தேதி வரை குறிப்பிட்ட நாள் இடைவெ ளியில் கன்றுக்குட்டி, ஆடு என 3 கால்நடைகளை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனை உறுதி செய்த வனத்துறையினர் 4 இடங்களில் கூண்டு வைத்தும், 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

இருப்பினும் சிறுத்தை கேமராவில் சிக்கவில்லை. இந்நிலையில் காசிகவுண்ட ம்பாளையம் பகுதியில், அகஸ்டின் என்பவரது வளர்ப்பு நாயை சிறுத்தை இழுத்து சென்றதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில், செடி, கொடி, மரங்கள் அடர்ந்து படர்ந்துள்ள நிலையில் மலையின் மேல் பகுதியில் சமதள பரப்பை காண முடிகிறது. மலைத்தொடரில் ஆங்காங்கே குகைகளும் உள்ளன. இவை சிறுத்தைகள் வாழ்வதற்கான கட்டமைப்பு டன் தான் உள்ளன.எனவே அங்கு சுற்றித்திரியும் சிறுத்தை அந்த மலைத்தொ டரை தனது வாழ்விடமாக்கி கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இருப்பினும் சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News