உள்ளூர் செய்திகள்

காலை உணவு திட்ட சோதனை ஓட்டத்தை மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

காலை உணவுத்திட்ட சோதனை ஓட்டம்

Published On 2023-08-23 12:57 IST   |   Update On 2023-08-23 12:57:00 IST
  • 15 வாகனங்கள் மூலம் சமையல் கூடத்திலிருந்து உணவு பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
  • நாளை 24 -ந் தேதி சமைத்த உணவு வகைகளுடன் வாகனங்கள் வெள்ளோட்டம் நடத்தப்படும்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 120 பள்ளிகளில் 27 ஆயிரம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இதற்காக உணவு சமைத்து, பள்ளிகளில் கொண்டு சென்று வழங்கும் விதமான பணிகளுக்கு திட்டமிடப்பட்டு அது குறித்த ஆய்வுக்கூட்டங்களும் நடைபெற்றது.இத்திட்டம் 5 குழுக்கள் தலைமையில் மேற்கொள்ள ப்படவுள்ளது. இதற்காக மொத்தம் 15 வாகனங்கள் மூலம் சமையல் கூடத்திலிருந்து உணவு பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்காக முருகம்பாளையம் பள்ளியில் சோதனை ஓட்டம் நடந்தது. அதனை மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், உதவி கமிஷனர் வினோத் கலந்து கொண்டனர். இப்பணி முழுமையாக மொபைல் செயலிகளில் பதிவேற்றம் செய்தும் சரி பார்க்கப்பட்டது.நாளை மறுநாள் 25ந் தேதி முதல் இத்திட்டம் தொடங்க உள்ளதால் நாளை 24 -ந் தேதி சமைத்த உணவு வகைகளுடன் வாகனங்கள் வெள்ளோட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News