உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விவசாயிகளுக்கு மானிய விலையில் சோளம் விநியோகம்

Published On 2022-10-01 10:17 IST   |   Update On 2022-10-01 10:17:00 IST
  • அரசினால் கிலோவிற்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது.
  • 105 முதல் 110 நாட்கள் வயது உள்ளது.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள வெள்ளகோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வரும் ராபி பருவத்தில் விதைப்பதற்கு ஏற்ற தானியம் மற்றும் தீவன பயிருக்கு ஏற்ற கோ 32 சோளம் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரகத்திற்கு அரசினால் கிலோவிற்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது. இந்த ரகமானது 105 முதல் 110 நாட்கள் வயது உள்ளது. இது இறவை மற்றும் மானாவாரிக்கு ஏற்றது. தானியத்திற்கு விதைப்பு செய்தால் எக்டருக்கு 2 ஆயிரத்து 445 கிலோவும், தீவனம் பயிரிட்டால் எக்டருக்கு 6 ஆயிரத்து 490 கிலோவும் மகசூல் தரக்கூடியது.

ஆகவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான கோ 32 சோளத்தினை மானிய விலையில் பெற்று பயிர் செய்து உயர் விளைச்சல் பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News