உள்ளூர் செய்திகள்
தி.மு.க.வினர் ஆய்வு செய்த காட்சி.
மகளிர் உரிமைத்திட்ட முகாமில் தி.மு.க.வினர் ஆய்வு
- மகளிர் உரிமை திட்டத்திற்கான பதிவு முகாம்கள் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- பல்லடம் வட்டாரத்தில் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
பல்லடம்:
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பதிவு முகாம்கள் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி பல்லடம் வட்டாரத்தில் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை அரசு பள்ளியில் நடைபெறும் மகளிர் உரிமைத்திட்ட பதிவு மையத்தில் பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி,பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக., செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் ஒன்றிய செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கோடங்கிபாளையம் ஊராட்சி செயலாளர் கண்ணப்பன், திமுக., நிர்வாகிகள் சுப்பையன், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.