உள்ளூர் செய்திகள்

கலைத்திருவிழா போட்டிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்ட காட்சி. 

தனித்திறமைைய மாணவர்கள் வெளிப்படுத்த வேண்டும் - கலைத்திருவிழாவில் மேயர் பேச்சு

Published On 2022-12-08 09:26 IST   |   Update On 2022-12-08 09:49:00 IST
  • வெற்றி, தோல்வி என்பது இல்லாமல்தன்னுடைய தனித்திறமையை மாணவ, மாணவிகள்வெளிப்படுத்துவது சிறப்பானது ஆகும்.
  • குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாககுழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலமாக கலைத்திருவிழா நடத்தப்படுகிறது.

திருப்பூர் : 

பள்ளி கல்வித்துறையின் சார்பில் திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரிநகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்செல்வராஜ்தலைமையில், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

அப்போது மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாககுழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலமாக கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. இந்தக் கலைத் திருவிழா மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வட்டாரபகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் போட்டிகள்துவக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். திருப்பூர்மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கு கொள்வது என்பது ஒரு சிறப்பான நிகழ்வு. வெற்றி, தோல்வி என்பது இல்லாமல்தன்னுடைய தனித்திறமையை மாணவ, மாணவிகள்வெளிப்படுத்துவது சிறப்பானது ஆகும்.

கலை என்பது உடல், உள்ளம்இரண்டையும் ஒருங்கிணைந்து செயல்படுத்தக்கூடியது. இந்த கலைத்திருவிழா போட்டிகளில் பங்குபெறும் மாணவ ,மாணவிகளுக்கு எனதுவாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

விழாவில் மண்டலத் தலைவர்கள் உமாமகேஸ்வரி,கோவிந்தராஜ், முதன்மைக் கல்வி அலுவலர்திருவளர்செல்வி, கவுன்சிலர் திவாகரன், உதவி ஆணையர் (பொறுப்பு )செல்வநாயகம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News