உள்ளூர் செய்திகள்

இன்ஸ்பெக்டர், பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற காட்சி.

ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்

Published On 2022-08-12 05:21 GMT   |   Update On 2022-08-12 05:21 GMT
  • மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
  • மாணவர்களுக்கு, ஒழுக்கம் சுயக்கட்டுப்பாடு அவசியம் பற்றி எடுத்துக்கூறினார்.

திருப்பூர் :

திருப்பூர் 15வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர் வரவேற்றார். திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ப.ராஜேஸ்வரி தலைமை தாங்கி, போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்கி, அவற்றை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு, ஒழுக்கம் சுயக்கட்டுப்பாடு அவசியம் பற்றி எடுத்துக்கூறினார். பள்ளி மாணவ தலைவர் அகல்யா ஆங்கிலத்திலும், துணைத்தலைவர் காருண்ய பருணி தமிழிலும் போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மூலம் போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்கும் அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்" என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News