உள்ளூர் செய்திகள்

வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை படத்தில் காணலாம்.

அடிப்படை வசதி செய்து தர கோரி உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

Published On 2022-11-09 08:21 GMT   |   Update On 2022-11-09 08:21 GMT
  • கல்லூரியில் சுமார் 2600 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.
  • மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேர் வகுப்புகளை புறக்கணித்தும் கல்லூரி வளாகத்திற்கு அமர்ந்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை :

உடுமலை எல்லை மற்றும் பிரிவு ரோடு பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் சுமார் 2600 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். கல்லூரியின் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் நீண்ட நாட்களாக அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை நிறைவேற்றித் தருமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கூறி இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் வகுப்புகளை புறக்கணித்தும் கல்லூரி வளாகத்திற்கு அமர்ந்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால் வகுப்புகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மாணவர்கள் தரப்பில் கல்லூரி வளாகத்திற்குள் குடிநீர் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு ஐடி கார்டு வழங்க வேண்டும். அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் உடனே வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாணவர்களின் புகார்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News